Thursday, January 28, 2010

நனோ டெக்னாலஜி

டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது டாக்ரேட் ஆராய்ச்சிக் கட்டுரை அளிக்கும் போது ஒரு சர்க்கரை மூலக்கூறின் கூட்டணுவின் பரிமாணத்தை சுமார் ஒரு நானோமீட்டர் என்று அறிவித்தார், முதன் முதலாக நானோமீட்டர் என்னும் அளவு உலகுக்கு அறிமுகமானது. நானோமீட்டர் என்பது ஒரு மீட்டரின் பில்லியன் பகுதி. ஒரு நானோமீட்டர் என்பது பத்து ஹைட்ரஜன் அணுக்களை பக்கத்தில் வைத்தால் கிடைக்கும் நீளம்." நானோ" உலகின் விதிகள், குவாண்டம் இயற்பியல் விதிகள். இவைகளை விளக்க புதிய முறைகள், கருவிகள் வேண்டும். அவைகளை சரியாக அறியும் போது வெளிப்படும் சாத்தியங்கள் மனிதனை கடவுளுக்கு அருகில் கொண்டுசெல்கின்றன.

சுமார் நூறு நானோ மீட்டரில் இருந்து நானோ டெக்னாலஜி ஆரம்பிக்கிறது. படிப்படியாக அளவு குறைந்துகொண்டேபோய் ஒரு தனிப்பட்ட எலெக்ட்ரானை நம் விருப்பத்தை போல நடத்துவதுதான் இந்த இயலின் குறிக்கோள். ஆராய்ச்சி முறைகள் சில, " இது சாத்தியமே" என்கிற நம்பிக்கையை தருகின்றன. நானோ டெக்னாலஜின் ஆதார சாகசம் அணு அளவில் பொருள்களை நம் விருப்பதை போல மாற்றுவது. ஒரு பொருளின் அணுகட்டத்தை மாற்றினால் அந்தப் பொருளின் இயற்கை பண்புகள் மாறிவிடும் என்பதே இதன் அடிப்படை.

உதாரணமாக, அடுபுக்கரியின் அணுகட்டமைப்பை சற்று மாற்றினால் அது வைரமாகிறது. இயற்கையில் இயல்பாக நடக்கும் இயற்கை வினைகளை ஒரு ஆராய்ச்சிசாலையில் மனிதன் செய்ய முடியும் என்று நம்பிக்கை தருகிறது இந்த டெக்னாலஜி. டெக்ஸ்லெர், மூலக்கூறு கம்ப்யூட்டர்களை வடிவமைபத்ற்கான யோசனை இயற்கையில் ப்ரோடீன் தயாரிப்பை கவனித்தால் கிடைக்கும் என்று சொல்கிறார். மேலும் ஒரு மரபணு அதற்குள்ளேயே அதன் இறுதி வடிவத்தின் செய்தியை வைத்திருப்பதை போல ஒரு கம்ப்யூட்டர் தான் இறுதியில் இந்தப் வேலை செய்யும் சாதனமாகப் போகிறோம் என்கிற அறிவை அதற்குள்ளே வைத்துவிட முடியும் என்கிறார். நூறு நானோ மீட்டரைவிட நுட்பமாக பொருள்களை தயாரிக்கும் திறமைதான் நானோ டெக்னாலஜி. இந்தத் திறமையை இரண்டு விதமாக அணுகுகிறார்கள், ஒன்று, "டாப் டவுன் " மற்றொன்று "பாட்டம் அப் ". அதாவது படிப்படியாக அளவை மாற்றிக்கொண்டே போய் "நானோ" அளவை எட்டுவது. இன்றைய தினத்தின் மைக்ரோ டெக்னாலஜி முறைகள் இந்த "டாப் டவுன்" வகையைச் சார்ந்தவை.மூலக்கூறுகள் என்னும் கூட்டணுவை ஒரு ச்விட்சாக மாற்றலாம் என்கிற யோசனை சுமார் 25 வருடங்களாக இருக்கிறது. இது சமிபத்தில் தான் நடைமுறையில் சில வேதியியல் பொறியியல் வளர்ச்சிகளினால் சாத்தியமாகி இருக்கிறது. மூலக்கூறுகள் என்னும் கூட்டணுக்கள் சில சேர்ந்து கொண்டு oxidation reduction என்னும் வேதியியல் மாற்றம் பெறும் போது ஒரு ச்விட்சாக இயங்குகிறது என்று UCLA பல்கலைகழகத்திலும், ஹியூலிட் பக்கர்டு நிறுவனத்திலும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர்.

நனோ டெக்னாலஜியின் பொருள்கள் வாயு அல்லது திரவ வடிவில் இல்லாமல் அதே சமயம் திடப்பொருள்கள் போல திடமாக இல்லாமல் குறிப்பிட்ட வரிசையில் மாறக்கூடிய திடப்பொருள்கள். நானோ டெக்னாலஜியின் தயாரிப்பு முறையில், அணு அளவில் மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு பொருளை அணு அணுவாக, சீராக உற்பத்தி செய்ய முடியும் என்பது சாத்தியம் எனில் கழிவுப் பொருள்கள் இருக்காது. தொழிற்சாலைகளில் விஷ வாயுக்களை காற்றில் கலக்காமல் செயல்படுத்தலாம். விரயமான செயல்கள் இல்லாததால் ஆற்றல் அதிகரிக்கும்.
இன்றைய இந்தத் தொழில்நுட்பம் ஓர் அபரிவிதமான வளர்ச்சியை மனித வாழ்வில் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

Wednesday, January 13, 2010

தன்னம்பிக்கை


தாழ்வு மனப்பான்மை :

என்னால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை நிச்சயம் தோல்வியையே தரும். தன்னைத்தானே சந்தேகிப்பதுதான் வீழ்ச்சியில் தலையாய வீழ்ச்சி-என்கிறார் மதாம் கத்தரீன் கஸ்பரீன்.

தாழ்வு மனப்பான்மை என்பதுதான் என்ன? தன்னை நம்பாமை என்ற மையக்கருத்தை அடிப்படையாக வைத்து அதைச் சுற்றி எழும் உணர்ச்சிப் பூர்வமான எண்ணங்களின் தொகுதியே தாழ்வு மனப்பான்மையாகும். தாழ்வு மனப்பான்மைக்குப் பலியானவன், தான் தோல்வி அடையப் பிறந்தவனே என வலுவாக நம்புகிறான்.

தோல்வி மனப்பான்மையை மாற்ற என்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று திருப்பித் திருப்பி மனதிற்குள் கூறி வலிமை பெற வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இழப்பது தெய்வத்திடம் நம்பிக்கை இழப்பதாகும் என்கிறார் விவேகானந்தர்.

அமெரிக்கரின் வெற்றி!

அமெரிக்கர்கள் ஏன் வெற்றி பெறுகிறார்கள் தெரியுமா? AMERICAN என்ற வார்த்தை ICAN என முடிவதால் அதாவதுI CAN என்னால் முடியும் என முடிகிறதே, அதனால்தான்!

தன்னம்பிக்கையை வெளிக்கொணருங்கள்!

சில வருடங்களுக்கு முன்னால் ஸ்பெயின் தேசத்தில் பயங்கரமான சூறாவளி ஒன்று வீசியது. விஸிகோத்தை ஆண்ட மன்னன் ஸ்விந்திலா என்பவனின் மகுடத்தை அந்தச் சூறாவளி வெளிக் கொணர்ந்தது.

1200 வருடங்கள் பூமிக்கடியில் புதைந்திருந்த மகுடம் அது. இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துவது எதை? உங்கள் தன்னம்பிக்கை மகுடம் கூட உங்களுக்குள்ளேயே அடியில் புதைந்திருக்கிறது. அதை வெளிக்கொணருங்கள் என்பதைத்தான்! இந்தத் தன்னம்பிக்கை வந்தவுடன் உங்கள் தோற்றம் மிடுக்குறும். பார்வை ஒளி பெறும். பேச்சு வலிமை பெறும். உங்கள் குறிக்கோளை அடைய உங்களால் இயலாது என்று நீங்கள் செய்யப்படும் ஒரு செயலைச் சிறிதளவு, தைரியமாகச் செய்து பாருங்கள். வெற்றி சிறிதளவு பெற்றாலும் உங்கள் தன்னம்பிக்கை வலிமை பெறும். அதாவது நீங்களே உங்களை சோதனைக்குள்ளாக்க ஆயத்தமாகுங்கள்.

வெற்றி பெறுபவரின் முக்கியமான குணாதிசயங்களுள் ஒன்று இதுதான். அவர்கள் தங்களைத் தாங்களே தொடர்ந்து மிஞ்சிய வண்ணம் நடப்பார்கள். என்னால் முடியும் என்று எண்ணி, நினைப்பதை அடைய, தான் நினைப்பதைவிட அதிகமாகச் செயல் புரிந்து கொண்டே இருப்பதே அவர்களது மனப்போக்காகும்

86 வயது அறிஞரின் கூற்று!

கார்டினல் கிப்பன்ஸ் என்ற முதுபெரும் பேரறிஞர் தாம் இறந்து போவதற்கு முன்பாகக் கூறிய வார்த்தைகள் இவை:- நான் 86 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறேன். நூற்றுக்கணக்கானவர்கள் வெற்றியின் முனையைத் தொட்டதைக் கண்டிருக்கிறேன். வெற்றியடைவதற்குத் தேவையான குணங்களில் தலையாயது நம்பிக்கைதான்! இதையே தான் எமர்ஸனும் கூறுகிறார்.

தன்னம்பிக்கையே வெற்றியின் அடிப்படை ரகசியம் என்று அவர் எழுதிய Self Reliance (தன்னம்பிக்கை) என்ற கட்டுரையை உடனே தேடிப்பிடித்து ஒரு முறை படியுங்கள். அதில் ஒரு பகுதி இதோ:-

நம்பு, நினை, முயல்!

நண்பா! நீ உன்னையே நம்பு, நீ மகாவலிமையும், மனோதிடமும், தன் உறுதியும் படைத்தவன் என்பது உன் சிந்தனையில் எப்போதும் ஊறிக்கிடக்கட்டும்.

அந்தத் தன்னம்பிக்கை உன்னுள் இருக்கும்வரை, எல்லா உள்ளங்களும் உன் விழியை நாடும். ஆண்டவன் உன்னை எங்கு வைக்கிறாரோ அங்கிரு, அந்த இடத்தில் அமைதியாக இருந்து பணியாற்று.

அவன் ஆணையை ஒரு போதும் மீறாதே, உன்னுடன் ஏக காலத்தில் வசிப்போரிடம் நட்புறவை வளர், அவர் தம் கால நிகழ்ச்சிகளில் கலந்து கொள், அனுபூதி பெற்ற மகான்களின் போக்கை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள். அவர்கள் தேவ தூதர்கள். கடவுளின் திருவடிகளை, குழந்தை உள்ளத்துடன் வீழ்ந்து துதித்த மகான்கள். அவர்கள் எய்தியுள்ள பக்குவ நிலையைப் பார்த்தால் அவர்கள் ஆண்டவன் அருளால் தூண்டப் பெற்று வாழ்வது விளங்கும்.

மனோ, வாக்கு, காயசித்தி பெற்ற மகாத்மாக்கள் அவதார புருஷர்கள் என்றே நமக்குத் தோன்றும். அவ்வனுபூதி செல்வர்களைப் போன்று நாமும் ஆக முடியும். அதற்கு ஏன் முயற்சிக்கக் கூடாது? நாம் குழந்தைகள் அல்லோம், நாமும் ஆண் பிள்ளைகளே. வீர மைந்தர்களே

தன்னம்பிக்கை வளர வழி!

எனது குறிக்கோள் என்ன என்பதை நானே நிர்ணயித்துள்ளேன். ஆகவே அதை அடையத் தீவிரமாகவும், முழு முயற்சியுடனும் தொடர்ந்து ஈடுபடுவேன். வெற்றி பெறுவேன். எண்ணும் எண்ணங்களே உடலின் வெளித் தோற்றத்திலும் செய்கையிலும் மிளிரும் என்பதை அறிவேன். ஆகவே நான் வெற்றி அடைந்த தோற்றத்தை மனக்கண் முன்னால் தினமும் முடிந்தவரை பார்ப்பேன்.

வெற்றி பெறத் தேவைப்படும் அனைத்துக் குணங்களையும் மனதில் ஒரு பத்து நிமிடம் தினம்தோறும் நினைத்து அதை அடையப் பாடுபடுவேன். நியாயம், தர்மம் இவற்றின் அடிப்படையில் அல்லாது மற்ற வழியில் வரும் வெற்றி நிலைக்காது என்பதால் தன்னம்பிக்கையுடன் நேர்மையான வழியிலேயே நிச்சயம் வெற்றியைப் பெறுவேன். வெற்றி நிச்சயம் என்பது எனக்கேயாகும் இந்தத் தன்னம்பிக்கைச் சிந்தனையை விடாது காலை எழுந்தவுடன் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள்.

வெற்றியை அடைய இரண்டாவது படி இதுவே!

தைப்பொங்கல் திருநாள் என்பது ஒரு மத சம்பந்தமான திருநாள் அல்ல. மாறாக இது ஒரு தமிழர் திருநாளாகும். அதிலும் தமிழ் உழவர் திருநாள் என்று சொன்னால் மிகையாகாது. உலகம் முழுவதும் மே தினம் என்று தொழிலாளர் தினத்தின கொண்டாடுகின்றனர். இந்த பழக்கம் தோன்றுவதற்கு பல நூறு வருடங்களிற்கு முன்னரே உழவர் திருநாளாக அதாவது விவசாய பெருமக்களின் தொழிலாளர் தினமாக தைப் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர் நம் தமிழ் மக்கள்.
மே தினம் ஒரு சோகத்தின் பிரதிபலிப்பு. ஆனால் தைப் பொங்கலோ உழைப்பிற்கும் நன்றி செலுத்துதலிற்குமான சந்தோசக் கொண்டாட்டம். சூரியனிற்கு விழா எடுக்கும் பழக்கம் எல்லா நாட்டினரிற்கும், எல்லா மதத்தினரிற்கும் உரிய ஒரு வழக்கமும், பழக்கமும் ஆகும். பண்டைய கிரேக்கர், உரோமானியர், சீனர் என்று பல தரப்பட்ட மக்களும் முக்கிய வழிபாடாக சூரிய வழிபாடு செய்துள்ளனர் என்பதற்கு சரித்திர சான்று உள்ளது. இந்து மதத்தின் உட்பிரிவுகள் ஒன்றில் சூரிய பகவானை முழுமுதற்கடவுளாக வழிபடும் பிரிவும் ஒன்று உள்ளது.

உழவுத்தொழிலிற்கு மிகவும் முக்கியமானது சூரிய ஒளி என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை. இந்த உண்மையை அன்றே மெய்ஞானத்தினால் உணர்ந்த நம் தமிழ் உழவர் பெருமக்கள் தை மாதம் முதலாம் திகதி சூரிய பகவானிற்கு விழா எடுப்பதை வழக்கமாக்கினர். இந்த முதலாம் திகதியை தெரிவு செய்ததற்கும் காரணம் உள்ளது. சூரிய பகவான் மகர ரேகையிலிருந்து கற்கடக ரேகையை நோக்கி நகரத்தொடங்குவது தை முதலாம் திகதியிலிருந்தே ஆகும். மகர ரேகையிலிருந்து கடக ரேகையை ஆனிமாதக் கடைசி தேதியில் வந்தடைவார். இந்த ஆறு மாதகாலம் உத்தராயண காலம் எனப்படும். பின் ஆடி முதலாம் தேதியிலிருந்து கடக ரேகையிலிருந்து புறப்பட்டு மகர ரேகையை மார்கழி மாத கடைசியில் மீண்டும் வந்தடைவார். இந்த ஆறுமாத காலம் தட்சிணாயன காலம் எனப்படும். மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களிற்கு ஒரு நாளாகும். உத்தராயண காலம் பகல் பொழுதும், தட்சிணாயன காலம் இரவுப்பொழுதுமாகும். இந்த பகல் பொழுதின் ஆரம்பமே தை முதலாம் திகதியாகும்.